Actor Rajinikanth announce his political entry on 31st dec

வரும் 31 ஆம் தேதி தனது அரசியில் பிரவேசம் குறித்து அறிவிப்பை வெளியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகா் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போதே அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டார்.



இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்தி வருகிறார். இன்று காலை 8.30 மணியில் இருந்து ரசிகர் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், நீலகிரி,தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, ரசிகர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கதாநாயகன் ஆசையில் சினிமாவுக்கு வரவில்லை. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தன்னை பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தவர் கலைஞானம் என தெரிவித்தார்.

ரஜினி ஸ்டைல் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தார் என கூறினார்.. 

சில நேரங்களில் நானும் தவறுகளை செய்துள்ளேன். டிச.,31ல் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும். எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன. எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 

அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும். போர் என்று வந்துவிட்டால் ஜெயிக்கணும்,,, அது தான் முக்கியம் அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். எனினும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.