கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கடவுள் இருக்கிறார் என்பதற்காக   மேற்கோள்காட்டி சொன்ன குட்டி கதையின்  வீடியோ ஆதாரம்  தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . தந்தை பெரியார் இந்து கடவுள்களை அவமரியாதை செய்தனர் என துக்ளக் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  இந்நிலையில் பெரியாரிஸ்டுகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ரஜினி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய நிலையில் ,   தன் பேச்சில் எந்த தவறும் இல்லை எனவே மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக மறுத்துள்ளார் .  அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார் ரஜினி ,  எடுத்த எடுப்பிலேயே  பெரியாரை விமர்சித்துள்ளதின் மூலம்   தன் அரசியல் ஆன்மீக அரசியல்தான்  என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் .

  

பெரியாரை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என திராவிட கட்சிகள் கூறி வந்த நிலையில் ,  பெரியாரின் கோட்பாட்டை எதிர்த்து அரசியல் களம் கண்டுள்ளார் ரஜினி ,  இந்நிலையில் பெரியாரின்  இந்துமத எதிர்ப்பு மட்டும் ரஜினி விமர்சிக்கவில்லை ,  பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தையே ரஜினி விமர்சித்துள்ளார் என்பதை  காட்டும் வகையில் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தலைப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கடவுள் இருக்கிறார் என ஆணித்தரமாக வலியுறுத்தி கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக அவர் சொன்ன குட்டி கதையின்  வீடியோ ஆதாரம் ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  அதில் ரஜினி சொன்ன குட்டி கதை :- 

வெளிநாட்டில் இருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்... அப்போது ஒருவர் பைபிள் படித்துக் கொண்டிருந்தார் அவருக்கு எதிரில் இருந்த ஒரு சயின்டிஸ்ட் (விஞ்ஞானி) பைபிள் படித்துக் கொண்டிருந்த நபரை பார்த்து நீங்கள் என்ன படிக்கிறீர்கள்  என்று கேட்க ,   எதிரில் இருந்த நபர் தான் பைபிள் படிக்கிறேன் என பதிலளித்துள்ளார்...  உடனே அந்த சயின்டிஸ்ட் காலம் விஞ்ஞானம் ,  அறிவியல் என்று மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது , இந்த காலத்திலும் இன்னும் கடவுள் பைபிள் ,  ஆன்மீகம் , என்று காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறீர்களே என்று நகைக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது தன்னை வந்து பார்க்கும்படிகூறி  தன்னுடைய விசிட்டிங் கார்டை எதிரில் உள்ள நபருக்கு கொடுக்கிறார் அந்த சயின்டிஸ்ட்...  பதிலுக்கு அந்த பைபிள் படித்துக் கொண்டிருந்த நபரும் நிச்சயமாக வருகிறேன் வந்து சந்திக்கிறேன் என அவரது விசிட்டிங் கார்டை  கொடுக்கிறார் , அதை அந்த விசிட்டிங் கார்டில் இடம்பெற்றிருந்த  பெயரை பார்த்தவுடன்  அந்த சயின்டிஸ்ட்க்கு  தூக்கிவாரிப் போட்டு விட்டது...அதற்குக் காரணம்  இவ்வளவு நேரம் தான் பேசிக்கொண்டிருந்த நபர் உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் போற்றக்கூடிய தாமஸ் ஆல்வா எடிசன் என்பது அந்த விசிட்டிங் கார்டை பார்த்த பிறகுதான் அந்த சயின்டிஸ்ட்க்கு தெரியவந்து.

  

 உடனே தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்த அந்த சயின்டிஸ்ட் , தாமஸ் ஆல்வா எடிஷனிடம்  சந்திக்க  நேரம் கேட்டு ,  அவரை நேராக அவரது ஆய்வு கூடத்திற்கு  சென்று சந்திக்கிறார் அப்போது ஆல்வா எடிஷன் ஆய்வு கூடத்தில் ஒரு கண்டுபிடிப்பு ஒன்று மிதந்து கொண்டிருந்தது உடனே அந்த சயின்டிஸ்ட்  எடிசனிடம்  இந்த கண்டுபிடிப்பை எப்படி செய்தீர்கள் என கேட்க அவர் இதை நான் செய்யவில்லை அது தன்னால் உருவானது  என கூற ,  வியப்படைந்த அந்த சயின்டிஸ்ட் , அது எப்படி சாத்தியம்.?  என கேட்கிறார் உடனே அதற்கு பதில்  சொன்னா எடிசன் உலகமே திடீரென ஒரு நாள் உருவானது  என சொல்லும்போது அந்த உலகம் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டு இருக்கிறது என்றுதானே அர்த்தம்...  அப்படி என்றால் ஒரு விஷயம் படைக்கப்பட்டு இருக்கிறது என்றால் ,  அதை படைத்தவரும் இருக்கிறார் தானே.?  அவர்தான் கடவுள்  என்பது போல அந்தக் கதையை ரஜினி சுவாரஸ்யமாக சொல்லி முடித்துள்ளார்  இதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது

இதோ அந்த வீடியோ...