Actor rajini speech about karunanidhi

75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தையும், தமிழக மக்களையும் கட்டிப் போட்ட கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ள கோடானு கோடி பேரில் நானும் ஒருவன் என்று நடிகர் ரஜின்காந்த் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் காலா படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசினார்.

நான் நடித்த சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்தார். அப்போது அவர் மேடையில் என்னை பாராட்டி பேசியதோடு, என்னை பாராட்டவும் செய்தார். எனக்கு அந்த தருணம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த . 75 ஆண்டுஙளாக தமிழ் மக்கள் கேட்டு வந்த அவரது குரலைக் கேட்க கோடிக்கணக்கான தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போல் நானும் காத்துக்கொண்டிருக்கின்றேன் என கூறிய ரஜினிகாந்த், அவர் விரைவில் பேசுவார் என்று நம்புகிறேன், அதற்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.