நடிகை நயன்தாரா பற்றி நடிகர் ராதாரவி சர்ச்சையாகப் பேசியிருந்த நிலையில், திமுகவிலிருந்து தற்காலிகமாக அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சையாகப் பேசுவதில் நடிகர் ராதாரவி பெயர்போனவர். மனதில் பட்டதைப் பேசுகிறேன் என்ற நினைப்பிலும் மைண்ட் வாய்ஸில் பேசுகிறேன் என்ற சிந்தனையிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வார். அண்மையில் மீ டூ விவகாரத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அந்த விவகாரத்தில் நடிகரும் டப்பிங்க் சங்க கலைஞர் தலைவருவான ராதாரவி புகுந்தார். சின்மாயியுடன் ஏட்டிக்குபோட்டியாகப் பேசி, கடையில் டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயியை நீக்கினார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து சின்மயி பக்கம் தீர்ப்பு வந்தது.
இந்நிலையில் ‘கொலையுதிர்காலம்’ என்ற பட விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்றார். அந்த விழாவில் நடிகை நயன் தாராவை பற்றி சர்ச்சையாகப் பேசினார். ‘முன்பெல்லாம் நடிகை கே.ஆர். விஜயா மட்டுமே கடவுளாக நடிப்பார். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். பார்த்ததும் கையெழுத்து கும்பிடுவதைப் போல இருப்பவர்களும்; பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்’ என்று ராதாரவி பேசியிருந்தார்.

ராதாரவி பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகப் பரவியது. ராதாராவியின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நயன் தாராவின் கதலர் விக்னேஷ் சிவன், பாடகி சின்மயி உள்பட பலரும் ராதாரவிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் திமுகவிலிருந்து தற்காலிகமாக ராதாரவி நீக்கப்படுவதாக அக்கட்சி பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

