Actor Karunakaran tweets about BJP National Secretary H.Raja

இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னாலே குழந்தைகளுக்கு பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கலாய்க்கும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆளுநரிடம் கேட்கப்பட் கேள்வி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள்! சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு குறித்து திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தும் திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். 

எச்.ராஜாவின் டுவிட் குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எச்.ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கூறும்போது, தன்மானமுள்ள மனிதன் என்றால் காவல்துறை பாதுகாப்பு இன்றி பொது வெளியில் எச்,ராஜா வர முடியுமா? என சவால் விடுத்திருந்தார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பதிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எச்.ராஜாவை கலாய்க்கும் வகையில் நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், "இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னால், குழந்தைகளுக்கு பிடிக்காது" என்று பதிவிட்டுள்ளார். எச்.ராஜாவின்
நடவடிக்கைகளால், இனி குழந்தைகளுக்கு ராஜா கதை சொன்னால் பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தியாவில் உள்ள 125 கோடி மக்ளும் என் குடும்பம் என்று மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது, இதனைப் பார்த்த நடிகர் கருணாகரன், சார் தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் சேர்க்காதீங்க என்று பதில் டுவிட் போட்டுள்ளார்.