Actor Kamals birthday wishes to actor Rajinikanth.
நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அங்கு இப்போதுதான் 12-ம் தேதி பிறந்ததாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
அரசியலுக்கு வருவேன் என அடிக்கடி பூச்சாண்டி காட்டி வந்த ரஜினி இந்த பிறந்த நாளின் போதாவது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் இன்று பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகர் பட்டாளம் ரஜினி முகம் பதித்த கொடியை இருசக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு அரசியல் தொண்டர்களாவே மாறிவிட்டனர்.
னது 67 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் ரஜினிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அங்கு இப்போதுதான் 12-ம் தேதி பிறந்ததாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
