actor kamalhassan is a disclaimer

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகு தான் நடிப்பதா இல்லையா என முடிவெடுக்க வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.

சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பும் ஓரளவு முடிந்துவிட்டன. இந்த படங்களைத் தவிர டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்திலும் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரம் அப்துல் கலாம் இல்லத்தில் புதிய கட்சி, பெயர், கொள்கைகள் போன்றவற்றை கமல் அறிவிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் தான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், திரைப்படங்களில் நடிக்க டைம் கிடைக்குமா தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இதனால் கமல் இத்துடன் படத்தில் நடிக்கப்போவதில்லை என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகு தான் நடிப்பதா இல்லையா என முடிவெடுக்க வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளேன்; படங்கள் வெளிவரவேண்டும் எனவும் இனி நடிக்கப்போவதில்லை என வெளியான தகவல் தவறானது எனவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.