பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு முட்டையில் உள்ள ஊழலை நற்பணி இயக்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக நடிகர் கமலஹாசன் புகார் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் ஊழல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நாடு முழுவதும் நிறைந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனால் கமலுக்கும் தமிழக அரசியல் கட்சிகாரர்களுக்கும் முட்டி கொண்டது. இதையடுத்து அமைச்சர்களும் கமலஹாசனும் மாறி மாறி வார்த்தை போர்களை தொடுத்து வருகின்றனர்.

மேலும் கமலஹாசன் ஒரு படி மேலே போய் தனது ரசிகர்களிடமும் மக்களிடமும் ஊழலை அம்பலபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிரான நடிகர் கமலஹாசனின் பேச்சைத்தொடர்ந்து, கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஜூலை 24 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து அவர்கள் பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கன்வாடி மையத்திலுள்ள 3 வயது 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதை தடுத்து நிறுத்திய கமலஹாசன் ரசிகர்கள், இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு முட்டையில் உள்ள ஊழலை நற்பணி இயக்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக நடிகர் கமலஹாசன் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்படி வழக்கறிஞர் மூலம் மட்டுமே சமூக நலப்பணிகளை மேற்கொள்ளுமாறும், முட்டை ஊழலை தடுத்து நிறுத்திய நற்பணி இயக்கத்தினருக்கு பாராட்டுகளும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.