Actor Kamal Haasan met with reporters at Chennai Airport
ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் அண்மையில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அவர்கள் கேட்ட ஊதிய பேச்சுவார்த்தையில் அரசு கூறியதில் இருந்து சற்று ஊதியத்தை உயர்த்த அரசு முன்வந்தது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
இதனிடையே அரசு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை வைத்து நிலைமை சரிசெய்ய முடிவு செய்தது தமிழக அரசு. இதை தொடர்ந்து தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு சென்ற மாத சம்பளத்தை தமிழக அரசு வழங்கியது. இதில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து நடிகர் கமல் ஹாசனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறினார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளத்தை தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
