மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையோரம் அமைந்துள்ள, அண்ணா நினைவகம் பின்புறமாக அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக திமுக தொண்டர்கள் லட்சகணக்கில் சென்னை மெரினாவை அடைந்தனர்.
பின்னர், ராஜாஜி காலில் வைக்கப்பட்ட அவரது உடலை, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டு, மெரீனா வரை கொண்டுவரப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க, அரசு  மரியாதையுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

 

நேற்று நாள் முழுதும் தொலைக்காட்சியில் நேரலையாக கலைஞரின்  இறுதி ஊர்வலம் ஒளிப்பரப்பப்பட்டது. அப்போது ராணுவ அதிகாரிகள் முதல் தொண்டர்கள் வரை டல்யூட் செய்து அஞ்சலி செலுத்திய காட்சியை டிவி யில் பார்த்த பல தொண்டர்கள் தங்கள் வீட்டில் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர் 

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் டிவி பார்த்தபடியே, கலைஞருக்கு எழுந்து நின்று சல்யூட் செய்து அஞ்சலி செலுத்தினர். இதனை புகைப்படம் எடுத்த ஜெயம் ரவி தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.