Asianet News TamilAsianet News Tamil

மின்தடை பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை... செந்தில் பாலாஜி எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்கில் உண்மைக்கான மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

action will taken if you spread slander about powercut says senthilbalaji
Author
Chennai, First Published Apr 30, 2022, 5:30 PM IST

சமூக வலைத்தளங்கில் உண்மைக்கான மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் அரசு மாவட்ட பழைய தலைமை மருத்துமவனையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலக்கரி தட்டுப்பாடு தீரவில்லை. தேவை இருந்துக் கொண்டு தான் உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப். 28 ஆம் தேதி) அதிகப்பட்ச மின் நுகர்வாக 17 ஆயிரத்து 380 மெகாவாட் பயன்படுத்தப்பட்டது.

action will taken if you spread slander about powercut says senthilbalaji

நேற்று (ஏப். 29 ஆம் தேதி) 17 ஆயிரத்து 543 மெகாவாட் என அதிகப்பட்ச நுகர்வு நடைபெற்றுள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டு மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கண்காணிப்பில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமைக்கு பிறகு மின் விநியோகத்தில் தடையில்லை. இனி எப்போதும் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. 500 மெகாவாட் கூடுதலாக உள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். மின் தடையால் பஞ்சாப்பில் போராட்டம் நடந்து வருகிறது.

action will taken if you spread slander about powercut says senthilbalaji

ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகாவில் மின்வெட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் 1.19 நாளுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தின் அதிகப்பட்ச மின் நுகர்வாக நேற்று (ஏப். 29ம் தேதி) 17,543 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் தேவை 17 ஆயிரத்து 543 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தடங்களின்றி சீராக மின் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து புதிய மின் திட்டங்களும் உடனடியாக விரைவாக செயல்படுத்தப்படும். சமூக வலைத்தளங்கில் உண்மைக்கான மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios