பாஜக முன்னாள் தேசிய செயலாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பாஜக மாநில பொது செயலாளர் நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ கல்யாணராமன் பாஜகவில்  எந்த பொறுப்பிலும் கிடையாது. சில நாட்களாக சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவையனைத்தும் அவருடைய சொந்த கருத்துகள். அவருக்கும் பாஜகவுக்கு எந்த விதமான தொடர்பும் கிடையாது’’ என அறிவித்துள்ளார்.

 

அதாவது எடப்பாடி பழனிசாமியை கல்யாணராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களாக கடுமையாக சாடி வந்தார். அதில், ‘’ஆடுபுருஷர்கள் சமூகம் மனநோயாளிகள் சமூகமாக மாறி வருகிறது என்ற உண்மையை சொன்னா கோவிச்சுக்கறானுங்க... மனநோயாளிக்கு தான் மனநோயாளின்னு தெரியுமா என்ன?! எடப்பாடி போன்ற பதவி ஆசை மனநோயாளிகள் இவனுங்களுக்கு சாமரம் வீசுவது இயல்புதான்.

ஆமாம்.... அவர்களிடம் அயோக்கியத்தனமும் அதனுடன் இணைந்த ஒற்றுமையும் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு அது தேவைப்படுகிறது.எடப்பாடி பழனிச்சாமி தினம் தினம் தன்னை இந்து விரோதியாக நிரூபித்து வருவதை காண முடிகிறது. 2021 தேர்தல் அதற்கு பதில் சொல்லும் இந்த கும்பலில் 25% பேர் குண்டு வச்சவன் அல்லது நாட்டுக்கு எதிராக சாதி செய்த வழக்கில் கைதாகி விடுதலை ஆனவன். எடப்பாடி பழனிச்சாமியின் சந்தோசம் இவர்களுடன் தானா?

எடப்பாடி அரசிற்கும், திமுகவிற்கு 6% குறைவான முஸ்லீம்களின் வாக்கை பெறுவதில் உள்ள போட்டி அவர்கள் இந்து சமுதாயத்தை துச்சமாகவும், கிள்ளுக்கீரை என பார்ப்பதையும் காட்டுகிறது. தமிழகமே காறித்துப்பும் ஜிகாதிகள் பற்றிய புதிய புரிதலை உருவாக்கவும், அவர்களை யோக்கியர்களை போல சித்தரிக்கவும், அவைகளின் வாக்கு வாங்கி தன்னுடைய கட்சிக்கு வேண்டும் என்பதாலும் சுமார் 20 இந்துதத்துவ சிந்தனையாளர்களை கைது செய்ய எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தம்பி ராஜவேலுவை விடுதலை செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கையை வலுவாக வைப்போம். ஜிகாதிகளுடன் கைகோர்க்கும் எடப்பாடி அரசை கண்டிப்போம் .

தமிழகத்திற்கு ஒரு யோகி ஆதித்யநாத் தேவை ஆனால் நம்மிடம் இருக்கும் முதல்வர் எடப்பாடி நோன்பு கஞ்சி நக்கி ஆக இருப்பது நமது துரதிர்ஷ்டம் என்றெல்லாம் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். கூட்டணி கட்சி என்றும் பாராமல் கல்யாண ராமன் முதல்வர் எடப்பாடி பழனிசமியை கடுமையாக விமர்சித்து வந்தது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.