Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு... அக்டோபர் 7ம் தேதி... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் திடீர் திருப்பம்.!

துணை முதல்வருமான ஓ.பி.எஸ் அனுமதியை பெறாமல், அவசர கதியில் அறிவிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Action taken by OPS ... October 7 ... Sudden turn in AIADMK chief ministerial candidate announcement
Author
Tamil Nadu, First Published Oct 2, 2020, 6:03 PM IST

வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் 6ம் தேதியே சென்னைக்கு வந்து விடுமாறு எடப்பாடி உத்தரவிட்டு இருந்தார்.

 Action taken by OPS ... October 7 ... Sudden turn in AIADMK chief ministerial candidate announcement

ஓ.பி.எஸ் தரப்பில் எந்த வித ஆலோசனையும் செய்யாமல் எடப்பாடி தரப்பின் இந்த திடீர் உத்தரவு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் அனுமதியை பெறாமல், அவசர கதியில் அறிவிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Action taken by OPS ... October 7 ... Sudden turn in AIADMK chief ministerial candidate announcement

அனுமதி பெறாமல் அறிவித்ததால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளிவராது என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இன்னும் சமரசம் ஏற்படவில்லை என்றும் அதனால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இருவரும் முரண்டு பிடிப்பதால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios