Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு... குவியும் பாராட்டுக்கள்..!

மிகவும் உன்னதமான செயல் நல்ல விஷயங்களுக்கு துணிந்து முடிவு எடுங்கள் மகிழ்ச்சி

Action taken by Chief Minister Edappadiyar ... Congratulations too
Author
Tamil Nadu, First Published Nov 6, 2020, 9:54 AM IST

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நாசமாகியுள்ளன. புதுச்சேரியிலும் அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு ஒருவர் பலியாகினார்.

இதையடுத்து, இளைஞர்களின் உயிரை குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். ஆந்திர மாநிலத்திலும் ஆன்லைன் சூதுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால், அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.

Action taken by Chief Minister Edappadiyar ... Congratulations too

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அரசு முடிவு செய்துள்ளது.Action taken by Chief Minister Edappadiyar ... Congratulations too

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு அம்மா அரசு துரிதமாக எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ‘’இதுபோன்ற நன்மைகளை நீங்கள் செய்வதால் பெருமை அடைகிறோம். திமுக தலைவரும் முதல்வரும் இது போல் சேர்ந்து நின்றால் தமிழகம் பொற்கழஞ்சியமாக மாறும். எவராலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய இயலாது. மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போயிவிடும். மக்களின் கரகோசம் உங்களை வந்து சேரும்’’ எனத் தெரிவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios