அதிமுகவில் அதிரடி மாற்றம்... ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..!
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.இளங்கோவன் (இவர் ஏற்கெனவே வகித்து வரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்).

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.இளங்கோவன் (இவர் ஏற்கெனவே வகித்து வரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்).
ஓமலூர் மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மணி, எம்.எல்.ஏ.வும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.