Asianet News TamilAsianet News Tamil

வெள்ளக் காலத்தில் ஜெயலலிதா போல செயல்படணும்.. மு.க. ஸ்டாலினுக்கு சசிகலா அட்வைஸ்.!

அன்றைய காலக்கட்டத்திலிருந்த கட்டமைப்புகளைக் கொண்டே ஜெயலலிதாவால் சரி செய்ய முடிந்தது என்றால் தற்போதுள்ள ஆட்சியாளர்களால் இன்றைய காலக்கட்டத்திலுள்ள நம்மிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து சரி செய்து மக்களைக் காப்பாற்ற வாய்ப்பு இருப்பதால் அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும்.

Act like Jayalalithaa during the floods. Sasikala's advice to Stalin!
Author
Chennai, First Published Nov 9, 2021, 10:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணமே, திமுக ஆட்சிக் காலத்தில் எந்தவித வடிகால் வசதியுமின்றி தொலைநோக்கு பார்வை இல்லாமல் சில முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள்தான் காரணம் என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியாளர்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கொண்டு இருக்கிறீர்கள், மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து விட்டீர்கள், இலவச தொலைபேசி எண்கள் அறிவித்தாகிவிட்டது. அமைச்சர்களோ தேங்கிய நீரை அகற்றிவிட்டோம் என்று தொடர்ச்சியாக போட்டிக் போட்டுகொண்டு பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் கொஞ்சம்கூட மழை நீர் வடியாமல் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.Act like Jayalalithaa during the floods. Sasikala's advice to Stalin!

கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜெயலலிதா துரிதமாக செயல்பட்டு ராட்சத மோட்டார் பம்புகளை அதிக எண்ணிக்கையில் பிற மாவட்டங்களிலிருந்தும் வரவழைத்து 24 மணி நேரத்துக்குள் சரி செய்துள்ளார்கள். அதேபோன்று துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் விரைவில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியும். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இரண்டு நாள்களாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்குகள் காலியாகிவிட்டதாக அங்குள்ள வீடுகளில் குடியிருப்போர் சொல்கிறார்கள்.

அவர்களது வீடுகிளல் உள்ள போர்களில் நீர் இருந்தும் மோட்டார் மூலம் நீரை மாடியில் உள்ள டேங்குகளில் ஏற்ற முடியாமல் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்று, மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவர இயலாத மக்களுக்கு தேவையான குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யவேண்டும். அதேபோல வீட்டிலிருந்து வெளிவர முடியாதவர்களுக்கு உணவு பொட்டலங்கள், குழந்தைகளுக்கு தேவைப்படும் பால், வயதானவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்களும் கிடைக்க இந்த அரசு உடனே ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களுக்கு சுகாதாரமான உணவு, மருத்துவ உதவிகள், காலை, மாலை இருவேலைகளிலும் தேநீர் ஆகியவை தடையின்றி கிடைக்க வழி வகை செய்யவேண்டும்.Act like Jayalalithaa during the floods. Sasikala's advice to Stalin!

மேலும், ஆட்சியாளர்கள் வெள்ளப் பகுதிகளை பார்வையிட செல்வதால், அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதை தவிர்து அவர்களுக்கு வரைபடங்களை காண்பித்து விளக்கம் கொடுப்பதிலேயே பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள். இந்த அரசு எந்த வித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால்தான் தற்போது இந்த அளவுக்கு மக்கள் பாதிப்படைந்து இருப்பதாக அனைவரும் கருதுகின்றனர். இதுபோன்று மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணமே, திமுக ஆட்சிக் காலத்தில் எந்தவித வடிகால் வசதியுமின்றி தொலைநோக்கு பார்வை இல்லாமல் சில முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள்தான் என்று ஆய்வாளர்களும், மக்களும் கருதுகின்றனர்.

தமிழக மக்கள் இந்த அளவுக்கு மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பற்றத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் இப்போதே தயார் நிலையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள இந்த அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஜெயலலிதா போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையால சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அதனைத் தொடர்ந்து 2005-ல் ஏற்பட்ட பாஸ் புயலின்போதும் எண்ணற்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததை ஒரே இரவில் அப்புறப்படுத்தியும், வெள்ளப் பாதிப்புக்களை சரி செய்தும் விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து தமிழக மக்களை காப்பாறினார்கள்.Act like Jayalalithaa during the floods. Sasikala's advice to Stalin!

அன்றைய காலக்கட்டத்திலிருந்த கட்டமைப்புகளைக் கொண்டே ஜெயலலிதாவால் சரி செய்ய முடிந்தது என்றால் தற்போதுள்ள ஆட்சியாளர்களால் இன்றைய காலக்கட்டத்திலுள்ள நம்மிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து சரி செய்து மக்களைக் காப்பாற்ற வாய்ப்பு இருப்பதால் அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும். தமிழகத்தில் தற்போது பெய்து வரும் இந்த மழையின் காரணமாக பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வீட்டு சுவர் இடிந்து தங்கள் இருப்பிடத்தை இழந்தவர்களுக்கு உடனடியாக சென்னை திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இதுபோன்ற காலக்கட்டங்களில் ஜெயலலிதா மீட்புபணியில் ஈடுபடுகின்றன மாநகராட்சியைச் சேர்ந்த தொழிலாளர்களும், இதர களப்பணியாளர்களுக்கும் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, தங்கும் இடம் போன்ற உதவிகளை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். அதேபோன்று, தற்போதும் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அடிப்படை தேவைகளை உடனே பூர்த்தி செய்யவேண்டும். கனமழையின் காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்” என்று அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios