அதனைத் தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சசிகலா ஆதரவாளர்கள் அவரை கட்சியில் சேர்ந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் எனக் கூறி வருகின்றனர்.
திருந்தி வருபவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசியிருப்பது என்ன மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசியிருப்பது கருத்துக்கள் பரபரக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன், அதிமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்துச் சென்றார் சசிகலா, பின்னர் அது சசிக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு உச்சக்கட்ட சோதனையாகவே மாறிப்போனது. அதிரடியாக சசிகலா குடும்பத்தையே கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தையும் ஓரங்கட்டி கட்சியின் முதன்மையானவராக வளர்ந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கோஸ்டியை நம்பி மோசம் அடைந்ததாக எண்ணிய பன்னீர்செல்வமும் சசிகலா பக்கம் எந்த நொடியிலும் சேருவார் என்று தொடர்ச்சியாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளும் அப்படியே இருந்து வருகிறது. சிறையிலிருந்து விடுதலையானதும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெயர் அதிர்வுகளை சசிகலா ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நாள் பிரம்மாண்ட வரவேற்புடன் வீட்டிற்குள் முடங்கினார் அவர்.

கொரோனா பரவல் அதிகரித்ததால் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்று கூறப்பட்டது. மீண்டும் கட்சியில் தம்மை சேர்த்துக் கொள்வார்கள் என்று காத்திருந்த சசிகலாவுக்கு எடப்பாடி ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக அளித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கியதும் அதிமுகவை கைப்பற்ற முடியாமலும், அம முகவுக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் திணறிய சசிகலா ஒருகட்டத்தில் அரசியலிலிருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை பெற அமமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இதுயடுத்து அதிமுகவை கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறார் சசிகலா. தற்போது திடீரென தொண்டர்களுக்கு தொலைபேசி மூலம் தினமும் பேசு அதற்கான ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த அவர். தனது ஆதரவாளர்களை நேரில் சந்திக்க போவதாக முடிவெடுத்துள்ளார். அதன் முன்னோட்டமாக தேவர் ஜெயந்தியின்போது தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அடுத்தடுத்த சுற்று பயணங்களுக்கு அவர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
அதேபோல் அதிமுக 50வது பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்றதுடன், அடுத்தநாளே தியாகராய நகர் எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று அதிமுக கொடி ஏற்றினார். மேலும் அங்கு கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று வைக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் பயணிக்க கூடாது, அவர் இனி பொதுச் செயலாளர் என்று தன்னை கூறிக் கொள்ள கூடாது என அவருக்கு எதிராக ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இதுவரை அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்ந நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று பன்னீர்செல்வம் திடீரென விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார். அவரின் பேட்டி அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பன்னீர்செல்வத்துக்கு ஜெயக்குமார் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாக இருந்த கே.பி முனுசாமி கடுமையாக எதிர்வினை ஆற்றினர்.

எனவே அதன் பிறகு சைலன்ட்டாகிப்போனார் பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒத்துப் போய் விட்டதாகவும் இனி சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேச மாட்டார் என கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சசிகலா ஆதரவாளர்கள் அவரை கட்சியில் சேர்ந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ள கருத்து அதிமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். விழாவில் ஒ.பன்னீர் செல்வம் ஒரு குட்டி கதை ஒன்று கூறினார். அதில், தவறு செய்து திரும்பி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்றும் அவர் குறிப்பிட்டார். நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை, பாவத்தை சுமந்து கொண்டு இருப்பவர்களை மனந்திரும்ப செய்யவே வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று இயேசு கூறினார்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் கூறிய அந்த குட்டி கதையில் இவ்வாறு அவர் பேசியது சசிகலாவை மனதில் வைத்துதான் என பலரும் கூறிவருகின்றனர். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதில் ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதையே அவரின் இந்த பேச்சு வெளிப்பாடுத்துகிறது என்று பலரும் சமூகவலைதளத்தில் கருத்துகூறி வருகின்றனர். ஆனால் இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளர் உறுதியாக உள்ளார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்பதில் நிர்வாகிகளும் உறுதியாக உள்ளனர் என கூறியுள்ளார்.
