Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்.பி.க்களின் ராஜினாமா ஏற்பு.. வெங்கய்யா நாயுடு அறிவிப்பு..!

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமாக்கள் ஏற்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார். 

Acceptance of resignation of AIADMK MPs
Author
Delhi, First Published Jul 19, 2021, 1:59 PM IST

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமாக்கள் ஏற்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இதனால் இவர்கள் தங்களின் எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொள்வார்களா அல்லது அதை ராஜினாமா செய்துவிட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்தது.

Acceptance of resignation of AIADMK MPs

ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதிலும் அதிமுக மட்டும் வெறும் 66 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இதனால், சட்டப்பேரவையில் தங்களின் பலத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். 

Acceptance of resignation of AIADMK MPs

இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios