Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் மகனுடன் மத்திய அமைச்சராகிறார் ஏ.சி.சண்முகம்... உறுதிப்படுத்திய அமைச்சர் மஃபா பாண்டியராஜன்..!

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழகத்திற்கு நிச்சயம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AC Shanmugam is the union minister with the OPS son
Author
Tamil Nadu, First Published Jun 1, 2019, 12:32 PM IST

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழகத்திற்கு நிச்சயம் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AC Shanmugam is the union minister with the OPS son

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அவர், ’’ரவீந்திரநாத் ஆக இருக்கட்டும் மற்ற 13 எம்.பிகளாக இருக்கட்டும் அனைவருக்கும் மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய தகுதி இருக்கிறது. இந்த விஷயத்தில் மோடி நெகட்டிவாக எதையும் கூறிவிடவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எதுவும் சொல்லிவிடவில்லை. அதிமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சராக காலம் தாமதிக்கிறது, அந்த காலம் வேலூர் தேர்தல் நடந்து முடிந்து கூட இருக்கலாம். வேலூரை வென்றெடுத்து அதன் பிறகு மத்திய அமைச்சராக சேரலாம். AC Shanmugam is the union minister with the OPS son

எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒரு நிக்ழவை வைத்து தமிழகத்தை மோடி புறக்கணிப்பதாகவும், வஞ்சிப்பதாகவும் கருதக்கூடாது. அதில் எந்த உண்மையும் இல்லை. நிச்சயமாக உரிய பிரதிநிதித்துவம் தமிழகத்திற்கு கிடைக்கும்’’ என அவர் தெரிவித்தார். AC Shanmugam is the union minister with the OPS son

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிமுக வேட்பாளராக புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். மஃபா பாண்டியராஜன் கூற்றுப்படி வேலூரில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் அவரும், ஓ.பி.ரவிந்திரநாத் குமாரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை வேலூரில் திமுக வென்றால்...? மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இதுவும் அமைச்சர் பாண்டியராஜின் கூற்றுப்படியே..! 

Follow Us:
Download App:
  • android
  • ios