அ.ம.மு.க. ஒரு லெட்டர்பேடு கட்சி. அதைவிட்டுடுங்க, அத கணக்குல எடுத்துக்கிட்டு பேசாதீங்க. அவங்களை எங்க கூட்டணியில சேர்க்கவே முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்.
* தி.மு.க. கூட்டணியில் அதிக கட்சிகள் சேர்வதால் கம்யூனிஸ்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதிகம் சேர்வதன் மூலம் இந்த கூட்டணி வலுவாகி, பா.ஜ.க. கூட்டணியை டெபாசீட் இழக்க வைக்கும் நிலையை உருவாக்கும்: கே.பாலகிருஷ்ணன். (தோழர் சரியாதான் சொன்னீங்க போங்க. தி.மு.க. கூட்டணியில உங்களத்தவிர யாருமே சேராட்டினாலும் கூட ஸ்டாலின் உங்களுக்கு தரப்போறது அந்த ஒண்ணோ ரெண்டோதான். இதுல என்ன பெரிய மாற்றம் வந்துடபோவுது இல்லையா?)
* அ.ம.மு.க. ஒரு லெட்டர்பேடு கட்சி. அதைவிட்டுடுங்க, அத கணக்குல எடுத்துக்கிட்டு பேசாதீங்க. அவங்களை எங்க கூட்டணியில சேர்க்கவே முடியாது: அமைச்சர் ஜெயக்குமார். (குமாரண்ணே ரொம்பக் கேவலம்ணே இது. அம்மா ஆட்சி நடத்துற நீங்க, அம்மா ஜெயிச்ச ஆர்.கே.நகர் தொகுதியில போயும் போயும் ஒரு லெட்டர் பேடு கட்சியாட்டேயா தோத்தீங்க! ரொம்பக் கேவலம்ணே இது. இதை உங்க வாயாலேயே ஒத்துக்கிட்டீங்க பாருங்க, அதுதான் ஹிட்டு.)
* எங்களது பயணம் தனித்து போட்டியிடுவதை நோக்கியே உள்ளது. அது மக்கள் கையில்தான் உள்ளது: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். (அய்யோ ராமா, இந்தாளை யாராச்சும் ‘அடுத்தவனுக்கு புரிவது போல் ஐந்தே நாளில் எளிதாய் பேசுவது எப்படி?’ங்கிற கோர்ஸுல சேர்த்து விடுங்கப்பா. இவரு கூட்டணியில நிற்கப்போறாரா இல்லே தனிச்சு பயணிக்கப்போறாராருன்னு மக்கள் எப்படிய்யா தீர்மாணிப்பாங்க?)
* அ.தி.மு.க.வில் உள்ள அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும், தேர்தலில் போட்டிய்ட உரிமை உள்ளது. அந்த வகையில் என் மகனும், போட்டிய்ட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார்: ஓ.பன்னீர்செல்வம். (இதுக்கு இம்பூட்டு விளக்கம் கொடுத்து நியாயம் தேடுற நீங்க....சசிகலாவோட குடும்ப அரசியலையும், ஸ்டாலினோட வாரிசு அரசியலையும் பத்தி கேவலமா பேசுறதுல கொஞ்சூண்டு நியாயமிருந்தாலும் சொல்லுங்கப்பு, நாங்க அரசியல் வுட்டுட்டு ஓடீடுறோம்.)
* நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் சேரும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். மற்றவர்களைப் போல் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா பதினைந்து லட்சம் போடுவேன் என்று பொய் சொல்ல மாட்டேன்: ராகுல்காந்தி. (இந்த வங்கிக் கணக்கெல்லாம் இருக்கட்டும் தல. பிரிட்டன்ல போயி கோடி கோடியா கொட்டி பில்டிங்குகளை வாங்கிக் செருகிக்கிற அளவுக்கு உங்க மச்சானோட வங்கி கணக்குல காசு குவிஞ்ச ரகசியம் எப்படி? அத சொல்லுங்க மொதல்ல பாஸு.)
