சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு  அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்..

அபிராமி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த சுந்தரத்துக்குத் தனக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலை

விட முடியாததால் கணவன், குழந்தைகளை கொல்ல திட்டமிட்டதாகவும் அதில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும பரபரபப்பை ஏற்படுத்தியது. அபிராமியின் கணவர் தீவிரமான ரஜினி ரசிகர் இதைக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் விஜயை அநேரில் அழைத்து அவருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்தப் பிரச்சனை குறித்து கவலைப்பட வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக துணை நிற்போம் என ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்க்கு ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மகிழ்ச்சியான பரிசு  ஒன்றையும் ரஜினி வழங்கியுள்ளார். அது என்ன தெரியுமா ? ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், தனது கடமைகளை ஒழுங்கான செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். குன்றத்தூர் பகுதி ரஜினி ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.