இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்பட உள்ளதாக அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி அமைப்பு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனின் வீரத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இளைஞர்கள் தங்களது ரோல்மாடலாக அபிநந்தனை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர். 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மகாவீர் ஜெயந்தியான ஏப்ரல் 17ம் தேதி ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் சாதனைப் பட்டயமும் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் அபிநந்தனுக்கு அளிக்கப்பட உள்ளது.