Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாத பிரதமர் மோடி... மத்திய அரசை டார்டாராய் கிழிக்கும் ப.சிதம்பரம்..!

இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என பொருளாதாரத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி கூறியுள்ளது மத்திய அரசுக்கு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லையா? என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Abhijit Banerjee's Comment On Economy... p.Chidambaram twitter
Author
Delhi, First Published Oct 17, 2019, 3:03 PM IST

இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என பொருளாதாரத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி கூறியுள்ளது மத்திய அரசுக்கு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லையா? என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ப.சிதம்பத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Abhijit Banerjee's Comment On Economy... p.Chidambaram twitter

இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது டுவிட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் செல்கிறது. இந்த நேரத்தில் நிதிச்சூழல் குறித்து கவலைப்படாமல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும், தேவையை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய புள்ளி விவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என்று கூறியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், "இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு உணரும் வரை நாள்தோறும் இரு பொருளாதாரக் குறியீடுகளை நான் பதிவிடுவேன். அதிலிருந்து பொருளாதார சூழல் குறித்த சொந்த முடிவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

இன்றைய பொருளாதாரக் குறியீடுகள்: 

1. இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வுச் செலவு குறைந்துவிட்டது. இதன் அர்த்தம் ஏழைகள் குறைவாக நுகர்கிறார்கள்.

2. பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு இருக்கும் மக்கள் அதிகம்" என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios