Asianet News TamilAsianet News Tamil

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பொறிவைத்து தூக்கிய அதிகாரிகள்.

துபாயில் இருந்து லக்னோ வழியாக உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(30) என்பவர் தங்கத்தை தனது காலுறையில் (சாக்ஸில்) மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

Abduction from Dubai to Chennai .. Officers who set a trap at the Chennai airport.
Author
Chennai, First Published Apr 8, 2021, 10:41 AM IST

சென்னைக்கு துபாயில் இருந்து காலுறையில் கடத்தி வந்த ரூ. 79 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் 2 பேரே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை பன்னாட்டு  விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும்  சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம்  கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். 

Abduction from Dubai to Chennai .. Officers who set a trap at the Chennai airport.  

அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது அனஸ்(28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் பதற்றமாகவும் பரபரப்பாகவும் நடந்து கொண்டார். சந்தைகமடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவுமில்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது பேண்ட்டில்  தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.  விசாரணையில் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்து தங்கத்தை தான் கொண்டு வந்ததாக ஒப்புக் கொண்டார். 

Abduction from Dubai to Chennai .. Officers who set a trap at the Chennai airport.

இவரிடம் இருந்து ரூ. 59 லட்சத்தி 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதுப்போல் துபாயில் இருந்து லக்னோ வழியாக உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(30) என்பவர் தங்கத்தை தனது காலுறையில் (சாக்ஸில்) மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து  ரூ. 20 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம்தங்கம் கைப்பற்றப்பட்டது. 2 பேரிடம் இருந்து ரூ. 79 லட்சத்தி 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரையும்  சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios