ஜெ.தீபாவுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், எனக்கு பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆயில் ராஜா புகார் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற தனி அமைப்பை ஜெ.தீபா தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து 
வருகிறார். மாதவனிடையே கருத்து வேறுபாடு; இதற்கு தீபாவின் நண்பர் ராஜாதான் காரணம் என்று மாதவன் தரப்பில் சொல்லப்பட்டது. கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, பேரவையில் இருந்து ராஜா நீக்கப்பட்டார். ஆனாலும், சில நாட்களில் மீண்டும் அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், பேரவையில் ராஜா மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கியதால் கடந்த 19 ஆம் தேதி தீபா அவரை மீண்டும் பேரவையில் இருந்து நீக்கினார். 

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து, பேரவைக்கு களங்கம் 
விளைவிக்கும் செயல்களில் ராஜா ஈடுபட்டு வருவதால் பேரவையில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட 
அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், ராஜா விடுவிக்கப்படுகிறார் என்று தீபா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இவை எல்லாமே மாதவன் செய்த சதி என்றும், மாதவன் தூண்டுதலின் பேரில் சிலர் சமூக வலைத்தளங்களில் எனக்கு அவதூறு பதிவு மற்றும் மிரட்டல் விடுத்து வருவதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஜெ.தீபாவுக்கு குடும்ப நண்பர் என்ற முறையில் பாதுகாப்பாக இருந்து வருகிறேன் என்றும், தீபாவுக்கு உறுதுணையாகவும், பாதுகாவலராகவும் இருந்து வருகிறேன்.

தீபாவுக்கு ஒரு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும், எனவே
எனக்குப் பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், ஆயில் ராஜா புகார் மனு கொடுத்துள்ளார்.