Asianet News TamilAsianet News Tamil

"அய்யா எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்" - ராம் மோகன் ராவ் வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் செய்த ஆம் ஆத்மி நிர்வாகிக்கு அடி உதை

aam aadmi-protest
Author
First Published Dec 21, 2016, 12:08 PM IST


தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி நிர்வாகிக்கு அடி உதை விழுந்தது.

கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.

aam aadmi-protest

இதற்கிடையில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையிறல் தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே சேகர் ரெட்டி இடம் இருந்து 131 கோடி சவரன் 123 நகை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை மொத்தம்  களத்தில் இருப்பதாக முதற்கட்ட தகவல்.

aam aadmi-protest

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராடும் கட்சி என்று பெயர் வாங்கிய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சென்னை மாவட்ட நிர்வாகி செந்திகுமார்  என்பவர் திடீரென போராட்டம் நடத்தினார். 

இந்த ரெய்டே ஒரு கந்துடைப்பு , முதல்வர் யார் எனபதை தீர்மானிக்க நடக்கும் ரெய்து. பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் , இலகணேசன் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தவில்லை. இது பற்றி உண்மை தெரிந்தாகணும் என கோஷமிட்டு சத்தம் போட்டு கொண்டிருந்தார். 

aam aadmi-protest

அப்போது அந்த வழியாக வந்த முதியவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆம் ஆத்மி தொப்பியை பிடுங்கி கன்னத்தில் இரண்டு அறைவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத செந்தில் போலீசுக்கு போன்செய்தார்.

அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது அவர்கள் வேலைக்கு இடையூறாக இவர் நடந்து கொள்கிறார் என்று அடித்த பெரியவர் கூறினார். போலீசார் பிறகு செந்திகுமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios