தீபாவளிக்கு வீட்டில் இருக்க வேண்டும்! என்று ஆசைப்படுகிறார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம். ஆனால் அவரை இந்த ஆண்டு தீபாவளியை  திகாரிலேயே  கொண்டாட வைக்க ஆசைப்படுகிறது மத்திய உள்துறை அமைச்சகம். அநேகமாக உள்துறையின் உள்நோக்கம்தான் நிறைவேறும் என்கிறார்கள். 


இந்த சூழலில் சிறையிலிருக்கும் சிதம்பரத்தினை மூன்றாவது கண் ஒன்று கண்காணிப்பதாக டெல்லி துவங்கி தமிழகம் வரையில் ஒரு அதிரடி தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. 
என்ன விவகாரம் அது?....


அதாவது சிதம்பரம் திகார் சிறைக்கு வந்த முதல் வாரத்தில் சரியாகவே தூங்கவில்லையாம். தலைக்கு வைக்க பில்லோ இல்லை, பெட்ஷீட் இல்லை, ஃபேன் ஓடவில்லை, கொசுக்கடி என ஏகப்பட்ட புகார்களை கூறியிருக்கிறார். பின்னர் இதையெல்லாம் கோர்ட்டில் அவரது தரப்பு முறையிட்டிருக்கிறது. கோர்ட் அனுமதித்ததால் அவையெல்லாம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், சிறையில் சிதம்பரம் படும் கஷ்டங்களையும், அவரது ரியாக்‌ஷன்களையும் உளவு கேமெரா ஒன்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறதாம். அரசரை போல் செட்டிநாட்டு பங்களாவில் வாழ்ந்தவர், உலகம் முழுக்க அநேக நாடுகளில் பெரும் பிஸ்னஸ் முதலீடுகளை வைத்திருப்பவர், மிகப்பெரிய வழக்கறிஞர் குடும்பத்தின் தலைவர், காங்கிரஸின் அரசாங்கத்தில் பெரும் பதவிகளை வகித்தவர், இந்த தேசத்தின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை அடைய ஆசைப்பட்டவர். இப்பேர்ப்பட்டவர்தான் சிறையில் இருக்கிறார். 

இந்த நிலையில், சிதம்பரத்தின் அன்றாட நடவடிக்கைகளை, ரியாக்‌ஷன்களை, சிரமங்களை ஒரு உளவு கேமெரா கண்காணித்துக் கொண்டே இருக்கிறதாம் இருபத்து நான்கு மணி நேரமும். இவை எல்லாம் அவ்வப்போது ஸாஃப்ட் காப்பியாக டெல்லியின் வி.வி.ஐ.பி.க்கள் சிலருக்கு அனுப்பப்படுகிறதாம். அதில் ஒரு வி.வி.ஐ.பி. மட்டும் இவற்றை பார்த்து ரசிக்கிறாராம். 

இந்த நிலையில், சிதம்பரத்தை திகாரில் சந்திக்க வரும் நபர்களை பற்றிய முழு விபரங்களையும் உளத்துறை ஃபைல் செய்து வைத்துக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால், இவர்களின் சொத்துக்களில் ரெய்டு நடக்கலாமாம். சர்தான்!