Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரி கொலை சம்பவத்தில் கொலையாளி யார்.? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் புகாருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு

சமூக நீதி மண்ணான தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை பேண அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

A resolution was brought in the Tamil Nadu Legislative Assembly to draw attention to the Krishnagiri massacre
Author
First Published Mar 23, 2023, 11:19 AM IST

கிருஷ்ணகிரி கொலை

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை நடுரோட்டில் வைத்து காதலியின் தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது  தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி ப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கடந்த 28ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கிடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் சரண்யாவை  காதல் திருமணம் செய்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தையான சங்கர்.  தனது உறவினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கி ஜெகனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.  

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை- தனிச்சட்டம் இயற்றிடுக- சீமான் ஆவேசம்

A resolution was brought in the Tamil Nadu Legislative Assembly to draw attention to the Krishnagiri massacre

சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறினார். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் சங்கர் அதிமுக கிளை செயலாளராக இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. எனினும் இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இது போன்ற சம்பவங்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் மனித நேயத்தை பேணி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.  

A resolution was brought in the Tamil Nadu Legislative Assembly to draw attention to the Krishnagiri massacre

அதிமுக- திமுக மோதல்

இதற்கிடையே கொலையாளி சங்கர் அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறியதற்கு அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி. கோவிந்தசாமி அருண்மொழி தேவன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமுருகன், காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திருப்பி பேரவையில் வாசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்.! எடப்பாடிக்கு மீண்டும் சவால் விடுத்த ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios