இந்து விரோத தீய சக்தி ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் திக திமுக என்பதை ஆ.ராசா நிரூபித்து விட்டார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இது 1960கள் அல்ல. ஏற்கனவே திமுக முன்னனி தலைவர்கள் நடத்தும் மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளேன். மேலும் தமிழகம் முழுவதும் திராவிட இயக்க தலைவர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் எடுக்கும்படி தேசிய சிந்தனையாளர்களிடம் கேட்டுள்ளேன். இவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்

தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம். 

இந்து விரோத திக திமுக: இந்து விரோத தீய சக்தி ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் திக திமுக என்று நான் கூறும் போதெல்லாம் ஸ்டாலின் மற்றும் (R)oad(S)ide பாரதி போன்றோர் தாங்கள் இந்து விரோதிகள் அல்ல என்று பசப்பி வந்தனர். ஆ.ராசா வின் பேச்சு சந்தேகங்களை தீர்த்து விட்டது. நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.