முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதற்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. சினிமா நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை குஷ்பு அரசியலில் திமுக, காங்கிரஸ் என கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வந்தாலும் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனுக்கு போட்டியிடுகிறார். நடிகை குஷ்புவிற்கு நாளுக்கு நாள் ஆயிரம் விளக்கு தொகுதி பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே தனது அரசியல் அனுபவத்தை வைத்து தீவிர பிரச்சாரம் செய்து எதிர் முகாமை நிலைகுலைய செய்து வருகிறார். 

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசினார். ராசாவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளரான குஷ்பு, முதல்வர் பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது என்னால் நம்ப முடியவில்லை, அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குஷ்பு கூறியிருக்கிறார். ஆ.ராஜாவின் சர்ச்சை பேச்சை முன்வைத்து குஷ்பு தேர்தல் களத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.