ஜெயலலிதாவை உங்காத்தா என கீழ்த்தரமாக பேசிய ஆ.ராசா ஒரு பன்றி. அம்மா ஒரு யானை. சூசகமாக தாக்க்கி மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஒரு கருத்தை கதையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

 உங்காத்தா (ஜெயலலிதா) ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்ககவே சசிகலாவை, சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இருந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன பதில்? என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே..? அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன்... ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா?’’என ஆ.ராசா பேசினார்.https://www.facebook.com/ammabakthi/posts/446134966547368

அவரது பேச்சு அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது. என்னதான் இருந்தாலும் ஆளும் கட்சி முதல்வரை ஒருமையிலும், மறைந்த முன்னள் முதல்வரை, மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவியை ஆ.ராஜா கடுமையான சொற்களை கொண்டு, கொள்ளைக்காரி, உங்காத்தா என்றெல்லாம் கொச்சையான வார்த்தைகளைப்பயன்படுத்தி பேசியிருப்பது எந்த வகையில் நியாயம்? என பல அரசியல் கட்சியினரும் கொதிப்படைந்தனர்.  

இதற்கு பல்வெறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சங்கரலின்கம், தனது முகநூல் பக்கத்தில், ‘’அடக்கம் வேண்டும்... கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.  ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
 
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை சொன்னது: "நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன் என்றது. கோயில் யானையாய் இருங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவை சூசகமாக ஆ.ராசாவை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.