A Rajas explosive book on 2G to release on January 20
ஆ.ராசாவின் அதிரடி பேச்சுகள்தான் இன்று தினகரன் vs அ.தி.மு.க.வுக்கு இணையான பரபரப்புகளை தமிழக அரசியல் அரங்கில் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
சில நாட்கள் சுற்றுப்பயணமாக கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு சென்றிருக்கிறார் ராசா. அப்போது செய்தியாளர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 2ஜி விவகாரம் குறித்துப் பகீர் தகவல்களை போட்டுத் தாக்குகிறார்.

அந்த வகையில் அன்னூர் அருகிலுள்ள ஒரு ஊரில் மீடியாவை சந்தித்தவர்...
“நான் மத்தியமைச்சராக பதவி வகித்த தொலைதொடர்பு துறையில் சிலரின் ஆதிக்கம் இருந்தது. நான் அதை முறியடிக்க விரும்பினேன். அதில் வெற்றியும் பெற்றேன். அதனால்தான் மொபைல் கட்டணம் குறைந்தது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. 3ஜி மற்றும் 4ஜி அறிமுகமாவதற்கு காரணமே நாங்கள்தான்.

நான் தொலை தொடர்புத் துறையில் சந்தித்த சவால்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து புத்தகம் எழுதி வருகிறேன். சில வாரங்களில் அந்த புத்தகம் வெளி வர உள்ளது. பல உண்மைகள் அத புத்தகத்தின் வழியே வெளியாகும்.” என்றிருக்கிறார்.

ஏற்கனவே காங்கிரஸை டார்கெட் செய்து பேசிவரும் ராசா இந்த புத்தகத்தின் வழியே என்னென்ன புது குண்டுகளை வீசப்போகிறாரோ என்று அலறி கிடக்கிறது தொலதொடர்பு துறை மேலதிகார வட்டாரம்.
