2ஜி அலைக்கற்றை வழக்கு மிகவும் நேர்த்தியாக ஜோடிக்கப்பட்டட வழக்கு என்பது நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது என ஆ.ராசா கூறியுள்ளார். 

முன்னதாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி திமுக கொள்ளையடித்த கட்சி. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையான ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தது திமுகதான் குற்றச்சாட்டை முன்வைத்தார். மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி விவாதத்துக்கு தயாரா என திமுக எம்.பி.யும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவருமான ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் திமுகவின் மீது குற்றத்தை நிரூபித்தால், நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில் 2 ஜி, சர்க்காரியா ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு ஜெயலலிதா பற்றி நீதிமன்றம் கூறியிருப்பதைச் சொல்ல வேண்டும். மேலும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2ஜி அலைக்கற்றை வழக்கு மிகவும் நேர்த்தியாக ஜோடிக்கப்பட்டட வழக்கு என்பது நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. 2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் கூறியது. 2ஜி வழக்கு குறித்து விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் நான் தயார். 2ஜி பிரச்சனையில் திமுக மீது மீண்டும் பொய் குற்றச்சாட்டை முதல்வர் கூறி வருவதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். சதந்தி, கிசுகிசு யூகம் என்தான் 2ஜி வழக்கு என்று நீதிமன்றம் மிக தெளிவாக கூறியுள்ளது. 

மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியதற்கு எதிரான வகையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் செயல்பட்டதாக நீதிபதிகள் மனவேதனையுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பில் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை அவர் மீறவிட்டதாக நீதிமன்றே கூறியுள்ளது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை படித்துக்காட்டி விளக்கமளித்தார். மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமான அரசமைப்பு சட்டத்தின்மீது நடத்தப்பட்ட படுகொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலாவோ, சுதாகரனோ, இளவரசியோ அரசியல் சட்டப்படியான பதவியில் இல்லை. 3 பேரும் பதிவியில் இல்லாதவர்கள் என்பதால் நீதிமன்றத்தின் தீர்ப்பு பதவியில் இருந்த ஜெயலலிதா பற்றித்தான். ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு விவரத்தை மறைத்து முதல்வரும், அதிமுகவினரும் பொய் கூறி வருகின்றனர். கோட்டையில் இதுகுறித்து விசாதிக்க தயார் என கூறினேன், ஆனால், இன்றுவரை பதிலளிக்கவில்லை. தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமல் உருவபொம்மையை எரிப்பதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.