Asianet News TamilAsianet News Tamil

”எப்போதும் நான் தீர்ப்புக்கு பயந்ததில்லை” - விடுதலையாகி மார்தட்டும் ஆ.ராசா...! 

A Raja said he was not always afraid of 2G judgment.
A Raja said he was not always afraid of 2G judgment.
Author
First Published Dec 21, 2017, 5:57 PM IST


குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரம் இல்லை என்று ஏற்கனவே தாம் தெரிவித்ததாகவும் 2ஜி தீர்ப்பை பற்றி எப்போதும் தாம் அச்சப்பட்டதில்லை எனவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழ ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். 

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 

மேலும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் அப்போது நல்ல தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆ.ராசா, குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரம் இல்லை என்று ஏற்கனவே தாம் தெரிவித்ததாகவும் 2ஜி தீர்ப்பை பற்றி எப்போதும் தாம் அச்சப்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தாய் தன் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தையை எவ்வாறு காப்பாற்றுவாளோ, அதே போல திமுக தலைவர் கருணாநிதி தன்னை காப்பாற்றி ஆதரவு அளித்தததாக கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios