2-ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கீழ் நீதிமன்றத்தில் தப்பியதை போல மேல் நீதிமன்றத்தில் தப்ப முடியாது. 2 பேருக்கும் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’ ப.சிதம்பரம் தன்னை திகார் சிறைக்கு அனுப்பி விடாதீர்கள், வீட்டு சிறையில் வையுங்கள் என்று கெஞ்சத் தொடங்கி விட்டார். சிதம்பரம் ஏராளமாக ஊழல் செய்துள்ளார். இது முதல் வழக்குதான். இதுதவிர விமானம் வாங்கியது உள்பட 7 வழக்குகள் உள்ளன.

அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும் சிறை தண்டனை கிடைக்கும். இதுதவிர சோனியாவுக்கும் தண்டனை கிடைக்கும். மனைவியை கொலை செய்ததற்கு சசிதரூருக்கு தண்டனை கிடைக்கும். மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சிறை தண்டனை கிடைக்கும். எனவே காங்கிரஸ் செயற்குழுவை திகார் சிறையில் நடத்தலாம். அத்தனை பேரையும் திஹார் சிறையில் போடுவார்கள்.

2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கீழ்கோர்ட்டில் தப்பி விட்டார்கள். மேல் கோர்ட்டில் 2 பேருக்கும் சிறை தண்டனை கிடைக்கும்’’ என அவர் தெரிவித்தார்.