மேற்கத்திய நாடுகளுக்கே டப் கொடுக்கும் ஸ்டாலின்: 1,14000 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி..NO.1 CM ன்னா சும்மாவா?
தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டச்சத்து உணவு, பிறப்புரிமை என்பதை உறுதிப்படுத்தும் திட்டமாகவே உள்ளது. இத்திட்டம் பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிகச் செய்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் உடல் நலம் பேணுதல், மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக தமிழக பள்ளிகளை உயர்த்துதல் போன்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாக கொண்ட திட்டம் என வர்ணிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் தானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நிலையில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற தாய் உள்ளத்தோடு பள்ளிக்கு பசியோடு வருகிற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார் .102 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சியின் ஆட்சியில் ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று மதுரை வரை விரிவடைந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டம் தொடக்கம்:
நீதிக்கட்சி ஆட்சியின் போது அயோத்திதாச பண்டிதரின் கோரிக்கையை ஏற்ற தியாகராயர் சென்னையில் மத்திய உணவு திட்டத்தை தொடங்கினார். பின்னர் அதை காமராஜர் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார், 1971-ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ஊட்டச்சத்து திட்டம் கொண்டு வரப்பட்டது, பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு திட்டமாக அது விரிவுபடுத்தப்பட்டது, பின்னர் 1989 இல் கலைஞர் கருணாநிதி அதை முட்டையுடன் கூடிய ஊட்டச்சத்து உணவாக வழங்கினார், பின்னர் வாரம் ஐந்து நாட்கள் முட்டை திட்டமாகவும் கருணாநிதி அதை வழங்க உத்தரவிட்டார். பிறகு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அது கலவை சாதமாக வழங்க உத்தரவிடப்பட்டது, இதுவரை மதிய உணவு மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1,14000 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க முதலமைச்சர் ஆவண செய்துள்ளார்.
" பசி பிணி நீக்கி விட்டால் மனநிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள் " பாடங்கள் மனதில் நன்கு பதியும், கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து என்ற உண்ணத சிந்தனையுடன் தமிழக முதலமைச்சர் இத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களில் கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்திற்கான கோப்பில் கையொப்பம் இட்ட போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என தமிழக முதலமைச்சர் புளங்காகிதம் தெரிவித்திருந்தார்,
இந்தில்லையில் தான் தமிழக முதலமைச்சர் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இன்று தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். தற்போது இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது, இதுவரை தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களிலேயே தலைசிறந்த திட்டமாக மக்களால் பாராட்டப்படுகிறது,. ஊட்டச்சத்து மிக்க, நோய் நொடியற்ற தலைசிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்கும் திட்டமாக இது இருக்குமென்று இது பாராட்டப்படுகிறது.
இது சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், வலிமையான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் திட்டம் என்றும் கல்வியாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இத்திட்டத்தை வரவேற்று பாராட்டி வருகின்றனர். மாணவ மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவர்கள் பாதிக்கப் படாமல் இருப்பர், இத்திட்டம் பள்ளியில் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பணிச்சுமையை குறைக்கும் என்று கல்வியாளர்கள் இதை கொண்டாடுகின்றனர்.
1. ஊட்டச்சத்தை உறுதிபடுத்தும் திட்டம்:-
ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பது இன்றியமையாததாகும், அதுவே உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, முளை வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது என்றே கூறலாம், ஒரு குழந்தைக்கு சிறு வயது முதல் ஊட்டச்சத்துடன் கொடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் மேற்கூறிய அனைத்து வளர்ச்சிகளையும் ஒருங்கே பெற்ற மனிதனாக அது வளர முடியும். அது சமூக வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் உட்டச் சத்து என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
பெரும்பாலும் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை என தகவல் கிடைக்கிறது, குடும்பச் சூழலும் , வீட்டிலிருந்து பள்ளிகள் வெகுதூரத்தில் இருப்பதுமே இதற்கு காரணம், இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காலை நேரத்தில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் அரசு, கோதுமை, ரவா,அரிசி வகை கிச்சடி பொங்கல் போன்ற உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் எனலாம்.
2. குழந்தைகளின் உடல் நலம் பேணுதல்: -
காலை சிற்றுண்டி திட்டம் நிச்சயம் குழந்தைகளின் உடல்நலத்தை பேணும் திட்டமாக இருக்கும் என்றே சொல்லலாம், பெரும்பாலான குழந்தைகள் காலை நேரத்தில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலைமை இருந்து வருகிறது, இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவர்கள் அல்லல்படும் நிலை உள்ளது, வலிமையான, உடல் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம்,
ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமெனில் காலை சிற்றுண்டி அவசியம், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவை மூன்றும் சேர்ந்ததுதான் சரிவிகித உணவு, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதன் மூலம் புரதச்சத்து குறைபாடு, இரும்புச்சத்துக் குறைபாடு, இரத்தசோகை, கண் பார்வை குறைபாடு போன்ற கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே பள்ளிகளில் காலை உணவை அரசு உறுதி செய்துள்ளதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடால் அவதியுறும் குழந்தைகள் என்ற நிலை மாறும் என்பதில் ஐயமில்லை, இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல கல்வி வளர்ச்சியையும் அதிகப்படுத்தும், வலுவான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் எனலாம்.
3. மாணவர்கள் வருகையை அதிகப்படுத்துதல்:-
பட்டிதொட்டி எங்கும் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் விரும்பி கல்விகற்க காரணமாக அமைந்தது மதிய உணவுத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் பலர் கல்வி அறிவு பெற்று, சமூதாயதில் இன்று உயர்ந்த இடங்களை அடைந்துள்ளனர். அதற்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சியும்,, பொருளாதார வளர்ச்சியுமே சான்றாக உள்ளது. பசியால் வாடிய குழந்தைகளுக்கு உணவளித்து, கல்வியில் தன்னிறைவு அடைந்த மாநிலமாக தமிழகத்தை திராவிட இயக்கங்கள் உருவாக்கி உள்ளன. இதன் மூலம் பெருமளவில் இடைநிற்றல் குறைந்தது,
ஆனாலும் இடைநிற்றல் என்பதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளது. அதில் தற்போது முக்கிய காரணமாக அறியப்பட்டு இருப்பது காலை நேரங்களில் மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை என்பதே ஆகும். தற்போது கலையிலும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். இதில் சுவைமிக்க ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது, தமிழக அரசின் இந்த காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை நிச்சயம் அதிகரிக்கும் என அடித்துக் கூறலாம்.
4. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உற்ற உதவி :
- பல்வேறு குடும்பச்சூழல் காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் பட்டினியாக வரும் நிலை உள்ளது. குடும்பப் பொருளாதாரச் சூழலை சமாளிக்கும் பள்ளி மாணவர்கள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது, அதுமட்டுமின்றி பெரும்பாலும் தாய்மார்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் நேரத்திற்கு எழுந்து, குழந்தைகளுக்கு உணவு சமைத்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பிறகு வேலைக்கு செல்வது, பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது.
தற்போது தமிழக அரசு காலை சிற்றுண்டி உணவை பள்ளிக்கூடத்திலேயே வழங்க முன்வந்திருப்பது பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு, பணிச்சுமையை குறைக்கும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. இனி எந்த தாய்மாரும் காலையில் எழுந்து உணவு சமைக்க வேண்டும் என்ற மன உளைச்சல் இன்றி பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக அனுப்பும் சுழமை, இந்த காலைச் சிற்றுண்டி திட்டம் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
5. சர்வதேச நாடுகளுக்கு இணையான திட்டம் :-
வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அரசு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனால் அங்கு கல்வி வளர்ச்சி உயர்ந்துள்ளது, மாணவர்களின் ஊட்டச் சத்து நிலையும் அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக, எந்த விதத்திலும் தரத்தில் குறையாமல், சத்து குறையாமல் காலை உணவு தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கிறது. அரசாங்கம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கவேண்டும் என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குழந்தைகளின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.