உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    அ.தி.மு.க.வில் நடப்பது பதவி சண்டை இல்லை. குடும்பங்களில் நடக்கும் பங்காளி சண்டை. இந்த பிரச்னைகள் விரைவில் முடியும்.
-    ஆர்.பி.உதயகுமார்.

*    ஊழல் இல்லாத நிர்வாகம்  குறித்து, பா.ஜ.க. அரசு பேசுகிறது. ஆனால், அரசின் செயல்பாட்டை பார்க்கும்போது, வலுவான லோக்பாலை கொண்டு வர விரும்பவில்லை என தெரிகிறது.
-    அன்னா ஹசாரே.

*    ம.தி.மு.க.வின் உறுப்பினர்களாக இருக்கிற இணையதள நண்பர்கள், தற்போது தோழமை கட்சிகளுக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் செய்ய கூடாது.
-    வைகோ

*    தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தினமும் ஒரு மணி நேரம் ஹிந்தி கற்றுக் கொள்கின்றனர். வருங்காலத்தில் ‘ஹிந்தி வாழ்க’ என அவர்கள் கோஷம் எழுப்புவர்.
-    புகழேந்தி

*    சமூக நலன் கருதி, இனி கூடுமானவரை வன்முறை சார்ந்த காட்சிகளை திரைப்படங்களில் காட்டுவதை, திரைப்பட துறையினர் தவிர்க்க வேண்டும்.
-    சரத்குமார்.

*    காவிரிப் படுகையை ஓர் எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக பேசுவதும், நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல.
-    கமல்ஹாசன்

*    நான் தான் கருணாநிதியின் தத்துப்பிள்ளை, ஆனால் இன்று நான், தி.மு.க.வால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலையாகிவிட்டேன்.
-    ராஜேந்தர்

*    மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் விமர்சிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குரலைத் தடுக்கவும், அவரது குடும்பத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே கார்த்தி சிதம்பரத்தின் கைது நடந்துள்ளது.
-    திருநாவுக்கரசர்

*    நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, அந்த அனுபவங்களை திரைப்படத்தில் பிரதிபலிக்கும் குணம் கொண்டவர் நடிகர் சல்மான் கான்.
-    காத்ரீனா கைஃப்

*    தமிழ் மொழியை தெரியாதவர்களுக்கு சர்க்கரை என்ற சொல் இரைச்சலாக இருக்கும், ஆனால் நிலவேம்பு எனும் சொல்தான் காதுக்கு இனிப்பாக இருக்கும்.
-    மதன் கார்க்கி