ஜெயலலிதா மறைவுக்ககுப் பிறகு அதிமுகவில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்திய பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவி தெரிவித்தனர்.
பொது மக்களின் நம்பிக்கைக்கு மாறாக வாக்களித்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தற்போது அந்தந்த தொகுதி மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

எம்எல்ஏக்களை போனில் தொடர்பு கொள்ளும் பொது மக்கள் அவர்களிடம் சரமாரியாக கேஙளவி எழுப்பி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்எல்ஏ வாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். இவர் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர். இவரை இன்று தொடர்பு கொண்ட பாப்பிரெட்டிபட்டி தொகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்ற இளைஞர், பழனியப்பனை கேள்வி கேட்டு திணரடித்துவிட்டார்.

நல்லா இருங்க சார் நீங்க, நீங்க செஞ்ச செயலப் பார்த்து அம்மாவோட ஆத்மா திருப்தி படுமா? நீங்க செஞ்சது சரியான்னு யோசித்துப் பாருங்க?
ஒரு ரூபா கூட வாங்காமா அம்மாவுக்காக ஓட்டுப் போட்டேன், ஆனா நீங்க அதை அடகு வச்சுட்டீங்க என கலைவாணன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பழனியப்பன் திணறினார்.
உங்கள கடவுளா நெனச்சேன்…இப்படி மனசாட்சி இல்லாம இருக்கீங்களே… என்று கலைவாணனின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அரண்டுபோன முன்னாள் அமைச்சர் பழனியப்பன் லைனைத் துண்டித்துவிட்டார்.

இதே போன்று சசிகலா ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தொகுதி மக்கள் கேள்விகள் கேட்டு திணறடித்து வருவாதால், அவர்கள் தங்கள் செல்போன்களை ஆப் செய்துவிட்டு பதுங்கி வருகின்றனர்.
