முதல்வரை நோக்கி கத்தியோடு ஓடி வந்த மர்ம நபர்...! யார்...? என்ன காரணம்..? தெரியுமா..?

கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை 10 மணி  அளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக கிளம்பினார்.

அப்போது அங்கு அவரிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் கூடி  இருந்துள்ளனர். அதில் சந்தேகம் படும்படியாக உள்ள நபர் ஒருவர், அந்த  கூட்டத்தில் இருந்ததை பார்த்த  பத்திரிக்கையாளர்கள், அவரிடம் யார்  நீங்க என கேட்க...அதற்கு பதில் அளிக்க மறுத்த அந்த நபர் திடீரென  தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து முதல்வர் அறையை நோக்கி சென்று உள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வெளியில் இருந்து சப்தம் எழுப்பவே, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை தடுத்து விசாரணை செய்தனர்

விசாரணையில், அவர் பெயர் விமல்ராஜ் என்றும், ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரா பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்து உள்ளது.

இந்த நபர் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முற்பட்டவர் என்றும், தற்போது முதல்வர் முன் நின்று தன்னை தானே கத்தியால் குத்தி உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும், வேலை வாய்ப்பை பெற தன் கையில் ரெஸ்யூம் வைத்து உள்ளதாகவும், மன நிலை சற்று பாதிக்கப்பட்டு உள்ளதகாவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது, விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.