சசிகலாவுக்கு எதுவெல்லாம் ஆகாதோ அதையெல்லாம் தேடிப் பிடித்து ரசிப்பதுதான் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். டீம் தலைமையில் நடக்கும் தலயாய பணி. ஆனால், ஒரேயொரு நபர் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாக போயிருக்கிறது. அது...’அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்’ விவகாரத்தில். 

சசிகலாவுக்கு எதுவெல்லாம் ஆகாதோ அதையெல்லாம் தேடிப் பிடித்து ரசிப்பதுதான் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். டீம் தலைமையில் நடக்கும் தலயாய பணி. ஆனால், ஒரேயொரு நபர் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாக போயிருக்கிறது. அது...’அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்’ விவகாரத்தில். ஆம் சசிகலா டீமுக்கு சுத்தமாக செங்கோட்டையனை ஆகாது. அவரது சின்ன சின்ன தவறுகளையும் கூட பூதாகரமாக ஊதிப் பெரிதாக்கி, ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து பதவியிலிருந்து தூக்கிவிடுவார்கள். அதனால்தான் 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபோது அமைச்சராகி, பின் சில காலத்திலேயே பதவியை இழந்த செங்கோட்டையனால் மேல் எழுந்து வரவே முடியவில்லை. 2011ல் மீண்டும் ஆட்சி அமைகையிலும் அவருக்கு அமைச்சரவையில் இடமில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம், சசிகலாதான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் களேபரமேற்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல்...செங்கோட்டையனின் சாணக்கியத்தனத்தை பயன்படுத்துவதற்காகவே அவரை அமைச்சரவையில் சேர்த்தார் சசிகலா.அப்போதும் அவரை முதல்வராகவிடவில்லை. இப்படி சசிகலா டீமினால் தாறுமாறாக சேதாரம் செய்யப்பட்ட செங்கோட்டையனை ஏனோ இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீமுக்கும் ஆகவில்லை. அதனால்தான் ‘பள்ளி கல்வித்துறை’ எனும் ஒன்றை வைத்துக் கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். யாரோடும், எதோடும் கலப்பதில்லை. விடிந்தால் ஒரு திட்டம், கருக்கையில் ஒரு அறிவிப்பு, இரவில் ஒரு சுற்றரிக்கை என்று அக்கல்வித்துறையில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தாலும் இ.பி.எஸ்., ஏன்? என்று கேட்பதில்லை. எக்கச்சக்க பாராட்டுதல்களை சம்பாதித்தாலும் ‘எப்படி?’ என்றும் கேட்பதில்லை. அவரை யாரும் சீண்டுவதே இல்லை. முதல்வராகவும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் இ.பி.எஸ். தன்னை எந்த கேள்வியும் கேட்டு, குடைச்சல் ஏதும் கொடுக்காத நிலையில், செங்கோட்டையனே வான் டட் ஆக முதல்வர் துறையில் முறைகேடுகள் நடப்பதாக வம்பிழுத்திருக்கிறார், அதுவும் பொது நிகழ்வில், மைக்கில் என்பதுதான் அ.தி.மு.க.வை அலறவும், தி.மு.க.வை சந்தோஷத்தில் திணறவும் வைத்துள்ளது. 
எங்கே நடந்தது இந்த சம்பவம்?....


ஏற்கனவே கொங்கு அமைச்சர்களில் செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார்! என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த சீண்டல் பேச்சினால் எந்த நொடியிலும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம்! என்கிறார்கள். 
அதுவும் சர்தான்!