அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக போலீசில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர். இவர் மீது சென்னையைச் சேர்ந்த பிரபல்லா என்ற பெண் போலீசில் புகார் கூறியுள்ளார். அந்த புகாரில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 மாத குடும்பம் நடத்தவிட்டு ஏமாற்றி விட்டதாக அதில் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் பிரபல்லா அந்த புகாரில் கூறியுள்ளார்.

தன்னுடன் குடும்பம் நடத்தவிட்டு தனது பணத்தை ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் திருமணம் செய்யவுள்ளார் என்றும் அவர் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாசரிடம் கேட்டால், நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பிரபல்லா
அந்த புகாரில் கூறியுள்ளார்.