தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு  இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகரராவ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் 1955ம் ஆண்டு காமராஜர் மதிய உணவு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதோடு அந்த திட்டம் பாரதி பிறந்த மண்ணில் எட்டையபுரத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவர்கள் பசியுடன் கல்வி கற்க கூடாது. உணவை காரணம் காட்டி பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது என்ற நல்லநோக்கத்திற்காக மதிய உணவு திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா போன்றவர்கள் அந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் யாராலும் அழிக்க முடியாத திட்டம். ஏழை மாணவர்களின் பசியை போக்கும் திட்டம் இது. மதிய உணவை சாப்பிட்டு கல்வி கற்ற மாணவர்கள் இன்றைக்கும் அரசு துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்.


தமிழகத்தை போலவே மதிய உணவு திட்டத்தை தெலுங்கானா அரசு கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இத்திட்டம் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் படிக்கவும், படிப்பை பாதியில் இடைநிறுத்துவதைத் தவிர்க்கவும்தான் உருவாக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.