வெளியானது  கருணாநிதி புகைப்படம்....!

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள  கலைஞரை பார்ப்பதற்கு ராகுல் காந்தி நேரில் வந்தார்.

கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி. அருகில் இருந்த  திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,அப்பா ராகுல் வந்துள்ளார் என கலைஞர் காதில் சொல்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்  வெளிடப்பட்டது. இதற்கு முன்னதாக  கலைஞர் உடல் நலம் குறித்தும், கலைஞர் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம்  சிகிச்சையில் உள்ள கலைஞரின் புகைப்படம் வெளியானதால், பல்வேறு  சர்ச்சைகளுக்கு  முற்றுபுள்ளி  வைக்கப்பட்டு  விட்டது.

இதன் காரணமாக காவேரி மருத்துவமனைக்கு எதிராக திரண்டு உள்ள தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்...

எழுந்து வா தலைவா.. காவேரியை வென்று வா என்ற வீர வசனமுழக்கம் எழுப்பி  வருகின்றனர் தொண்டர்கள்.

இந்த போட்டோவை பார்க்கும் போது, இதுவரை கலைஞருக்கு உயிர் காக்கும் கருவி  எதுவும் பொருத்தப்படாமல் உள்ளது என்பது தெளிவாக  தெரிகிறது. ஆனால் அவருடைய  இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம், உடல் வெப்ப நிலை, சீரான சுவாசம் இவை அனைத்தையும்  கண்காணிக்க மானிடர்  மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.