Asianet News TamilAsianet News Tamil

அரசு ஊழியர்களுக்கு ஒரு நியாயம்... தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமா..? கொதிக்கும் ராமதாஸ்..!

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்து கழகங்கள் முன்வர வேண்டும் என பாமக நிறுபனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 
 
A justification for state employees ... a justification for private companies ..? Boiling Ramadas ..!
Author
Tamil Nadu, First Published Jun 1, 2020, 12:43 PM IST

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்து கழகங்கள் முன்வர வேண்டும் என பாமக நிறுபனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு கொரோனா ஆபத்து விலகிவிட்டது என்று பொருள் அல்ல. இப்போது நோய்ப்பரவல் ஆபத்து அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் வழக்கமாக மாற வேண்டும்.

A justification for state employees ... a justification for private companies ..? Boiling Ramadas ..!

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்து கழகங்கள் முன்வர வேண்டும்.A justification for state employees ... a justification for private companies ..? Boiling Ramadas ..!

ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்துக் கழகங்கள் மதிக்காமல் இருப்பது நியாயமல்ல. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios