a hottest news is waiting within 10 days said divakaran

10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்..! அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்..!?

சசிகலாவின் பெயரை வைத்து திவாகரன் மற்றும் தினகரன் இருவரும் சட்ட ரீதியாக மோதி வருகின்றனர்

திவாகரனுக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப சண்டை விவகாரமானது, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பதிவின் மூலம் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, தினகரன் மற்றும் திவாகரன் இருவரும் வெளிப்படையாகவே மாறி மாறி எதிர் எதிர் கருத்து தெரிவித்து வறிகின்றனர். இந்நிலையில், சசிகலா பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது என சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

பின்னர் இது குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு, வழக்கறிஞரிடமும் ஆலோசித்து செய்தியாளர்களை சந்தித்தார்

அதில், இனி மேல் சசிகலா பெயரை பயன்படுத்த போவதில்லை...சசிகலா எனக்கு சகோதரி அல்லது முன்னாள் சகோதரி என தெரிவித்து இருந்தார் சசிகலாவிடம் இருந்து முதலில் பன்னீரை பிரித்தார் தினகரன்.

அடுத்து எடப்பாடி...இப்போது நான் எனவும் தெரிவித்து இருந்தார் திவாகரன்.

இதனால் தான் தனி கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்றும், இனிமேல் என்னுடைய அடுத்தடுத்த பாய்ச்சல்கள் இருக்கும் என்றும், தேர்தல் நேரத்தில் தினகரனை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் திவாகரன் பேசி உள்ளார்

இது குறித்து திவாகரனின் ஆதரவாளர்களிடம் பேசும் போது, "தன் அக்கா சசிகலாவுக்காக தான் திவாகரன் இவ்வளவு நாள் பொறுமை காத்தார். இப்போது அவரே வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார். அதன் காரணமாக தான் திவாகரன் களத்தில் இறங்கிவிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.

தீர்ப்பு வெளியானதும், அதில் சிலருக்கு அமைச்சர் பதவி வாங்கித்தரும் அளவிற்கு டீல் நடக்கிறது.

அவர்களில் சிலர் விவைவில் திவாகரன் பக்கம் வருவார்கள் என தெர்யவந்துள்ளது

இன்னும் 10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும் என திவாகரன் எனகளிடம் அடித்து கூறினார் என, அவருடைய ஆதரவாளர்களில் ஒருவர் பிரபல இதழுக்கு தெரிவித்து உள்ளார்.

அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் திவாகரன் கூறி இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார் ஆதரவாளர்.