a guy addressed himself as jaya son

எனது தாயார் ஜெயலலிதா என்றும், அவரின் சொத்துக்கள் எனக்குதான் சொந்தம் எனவும், சசிகலாவிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதையடுத்து அப்போலோ மருத்துவர்களும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே குழுவும் ஜெயலலிதாவிற்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

ஆனால் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமணை அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து தமிழகமே சோகத்தில் ஆழ்ந்ததோடு ஜெ மரணம் குறித்து பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகம் எழுந்தது. இதன்பின்னர், சசிகலா தரப்பினரிடையே இருந்து வெளியே வந்த ஒ.பி.எஸ்சும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் பிறந்த மகள் நான் என பிரியா மகாலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மோசடி வழக்குகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி என்பவர் நான்தான் ஜெயலலிதாவின் மகன் என்றும், அவரது சொத்துக்கள் எனக்கே சொந்தம் எனவும் தலைமை செயலாளர் உள்ளிட்ட 4 பேரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது :

எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி, நான் ஈரோட்டில் ஜெயலலிதாவின் தோழி வசந்தாமணி வீட்டில் வசித்து வருகிறேன்.

எனது தாயார் ஜெயலலிதாவை கொன்றவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான்.

எனக்கும், எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.

ஜெயலலிதாவிற்கு நான் ஒரே மகன் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம்.

எனது தாயாரான ஜெயலலிதாவுடன் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திதி முதல் 18 ஆம் தேதி வரை 'வேதா நிலையம்' போயஸ்கார்டனில் இருந்தேன்.

அம்மாவுடன் அறிமுகம் செய்யும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்பொழுது ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

செப்டம்பர் 22 ஆம் தேதி சசிகலா ஜெயலலிதாவை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்.

இதனால் சசிகலாவிற்கு பயந்து என்னால் வெளியே வர முடியவில்லை.

அதனால் எனக்கும் எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் தகுந்த பாதுக்கப்பு அளிக்க வேண்டும்.

சசிகலாவிற்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை பேர் ஜெயலலிதாவிற்கு உரிமை கொண்டாடிக்கிட்டு வருவாங்கன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.