Asianet News TamilAsianet News Tamil

ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்கணும்.. பாஜகவுக்கு கூட்டணி கட்சி குடைச்சல்!

பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் உண்மை நிலை தெரிய வேண்டும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று பீகார் முதல்வரும் பாஜக கூட்டணி கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 
 

A fact will be known .. Pegasus will investigate the espionage issue .. Coalition party whip for BJP!
Author
Delhi, First Published Aug 2, 2021, 9:32 PM IST

இஸ்ரேல் உளவு மென்பொருளான பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் அரசியல் அரங்கை உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு பிடி கொடுக்கவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.A fact will be known .. Pegasus will investigate the espionage issue .. Coalition party whip for BJP!
இதுதொடர்பாக நிதிஷ்குமார் கூறுகையில், “மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் இதுபோன்ற செயல்களை செய்யக் கூடாது. இதுதொடர்பாக முழு விவரமும் வெளியே தெரிய  வேண்டும். பெகாஸஸ் விவகாரம் குறித்து உண்மை நிலை தெரிய வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். A fact will be known .. Pegasus will investigate the espionage issue .. Coalition party whip for BJP!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தை வலியுறுத்தி வருவதால் இதுப்பற்றி விவாதிக்கலாம்” என நிதிஷ்குமார் தெரிவித்தார். கூட்டணி கட்சி முதல்வரான நிதிஷ்குமாரின் இந்தக் கருத்து பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது
 

Follow Us:
Download App:
  • android
  • ios