வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான 3039 தபால் வாக்குளில் அதிமுக வேட்பாளர் சண்முகம்  முன்னணிலை பெற்றுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக . சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தன..

இந்த தேர்தலில் 3039 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. முதலில் இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 6 இடங்களில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

தபால் வாக்குகள் எண்ணப்படும் அதே நேரத்தில் தேர்தலில் பதிவான வாக்குளும் எண்ணப்பட்டு வருகின்றன.

இதன் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவர் 1777 வாக்குளைப் பெற்றுள்ளார்.