யாருக்கும் உதவாத உதவாக்கரை பட்ஜெட் என தமிழக அரசு அறிவித்த பட்ஜெட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இன்று தமிழக சட்டபேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார், இந்நிலையில் அதனை விமர்சித்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘’சங்கீத வித்வான் போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார்.. நெல் கொள்முதல், கரும்புக்கான ஆதார விலைஉயர்வு குறித்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

 

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கானது இல்லை.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாநில வருவாயை பெருக்கும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. கோடநாட்டை கொள்ளை அடித்தை போல தமிழகத்தை கொள்ளையடிக்க ஒரு பட்ஜெட். ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது.

 1 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அதுகுறித்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என அவர் விமர்சித்துள்ளார்.