இந்திய சினிமாவில் இது பயோபிக் காலம். சாவித்திரியில் துவங்கி, மோடி வரைக்கும் எடுத்துவிட்டார்கள். ஆனால் சிலரது பயோபிக்தான் செம்ம ஹாட் அண்டு ஹைலைட்டாக இருக்கும். அதில் ஜெயலலிதாவினுடையது முன் வரிசையில் முக்கியமானதாக இருக்கும்! என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஜெயலலிதா மறைந்ததுமே அவரது வாழ்க்கையை படமாக எடுக்கப்போகிறேன் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டினார்கள். ராம்கோபால் வர்மா, பிரியதர்ஷன், ஏ.எல்.விஜய் என்று அந்த பட்டியல் நீண்டது. இதில் விஜய்யும், பிரியதர்ஷனும் ப்ராஜெக்டை துவக்கிவிட்டனர். பிரியதர்ஷன் நித்யாமேனனை வைத்தும், விஜய்யோ கங்கணா ரணவத்தை வைத்தும் இந்தப் படத்தை எடுக்கிறார்கள். விஜய் பட டைட்டில் ‘தலைவி’. நித்யா டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட்தான். ஆனால் கங்கணாவோ ஒரு நடிப்பு ராட்சஸி! எந்த கேரக்டரில் நடிக்கிறாரோ அந்த கேரக்டராகவே தன் நடை உடை பாவனை  உருவ அமைப்பு மட்டுமில்லாது நுணுக்கமான உடல் மொழியையும், திறமைகளையும் கற்றே களமிறங்குவார். 

அந்த வகையில் ஜெயலலிதாவாக மாறிக் கொண்டிருக்கும் கங்கணா, பரதநாட்டியம் கற்க துவங்கியுள்ளார். ஆம், ஜெயலலிதாவுக்கு பரதநாட்டியம் பக்காவாக வருமே. படத்தில் அப்படியான காட்சிகளும் இருப்பதால் கங்கணா பரதம் கற்றுக் கொண்டிருக்கிறார் தீவிரமாக. ஜெயலலிதாவாக தன்னை செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கங்கணா, ஜெயலலிதாவை ஒவ்வொரு விஷயத்தில் இமிடேட் பண்ணி பர்ஃபெக்டாக நடித்து பயிற்சி எடுக்கையிலும் ‘அந்த அம்மாவின் ஆத்மா என்னுள் இறங்கிடுச்சு’ என்று ஜாலியாக சொல்வாராம்.

அவரை ‘அம்மா’ என்றே ப்ரீ ப்ரொடக்ஷன் குழு அழைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பது யார் தெரியுமா? பாரதிய ஜனதாவிலிருக்கும் வி.ஐ.பி. டான்ஸரான நடிகை காயத்ரி ரகுராம்தான். 

ஆக ஜெயலலிதாவின் ஆத்மாவை பாரதிய ஜனதா ஆட்டிவைக்குதுன்னு சொல்லுங்கோ!
ப்பார்றா, கொளுத்திப் போட்டாச்சா!